“ஓயாமல் உழைத்த தமிழன் இங்கு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறான் என்று என் கல்லறையில் எழுதப்போகும் எழுத்துக்களுக்காக நான் தவம் இருக்கிறேன்” என்ற தன் வாக்குக்கேற்ப, ஒரு திராவிட இயக்கத்தின் தீவிர தொண்டனாக, தன் படைப்புகள் மூலம் பகுத்தறிவு பரப்பிய பெரும் கலைஞராக, முத்தமிழ் அறிஞராக, சமூக நீதி காத்த ஒரே அரசியல் தலைவராக, தமிழகத்தின் முதல்வராக தன் வாழ்நாளெல்லாம் ஓய்வின்றி உழைத்த பண்முகத் தலைவர் மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் ஓய்வெடுக்கும் இந்த வங்கக்கடலோரம், அவரின் தியாகத்தை போற்றும் விதமாகவும், எதிர்காலத் தலைமுறை அறிந்து கொள்ளும் வகையிலும், தமிழுக்கும் தமிழருக்கும் கொடையாய் தலைவர் தந்து சென்ற நம் தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைவர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் நவீன தொழில்நுட்பங்களின் வழியாக கலைஞரின் வாழ்க்கை வரலாற்றையும் அவரின் தியாகங்களையும் நாம் அறிந்து கொள்ளும் வகையில் கலைஞர் நினைவகத்தை அமைக்கின்றார்.

இந்த நினைவகம் எந்தெந்த தொழிநுட்பத்தில் கலைஞர் அவர்களின் வாழ்க்கையை எப்படி பிரதிபளிக்கவிருக்கின்றது, பார்வையாளர்களுக்கு எப்படி இதை ஒரு புதுவித அனுபவமாக 7 அதிநவீன தொழில்நுட்பத்தின் வாயிலாக அமைக்கலாம் என்ற பரிசீலனை மாதிரி வடிவத்தை நாங்கள் சமர்பிக்கின்றோம்.

Experiences

1. சரித்திர நாயகரின் சாதனைப் பயணம்

புகைவண்டியின் மாதிரி வடிவம் போல அமைக்கப்படும் இந்த அரங்கில், தலைவர் கலைஞர் அவர்களின் பிறப்பு, குழந்தை பருவம் முதல், திராவிடக் கொள்கைகளை தன் படைப்புகள் மூலம் பரப்பிய கலைஞரின் ஆரம்பகால கலை, அரசியல் வாழ்க்கையைத் தொடர்ந்து, முதன் முறையாகத் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்கும் காலகட்டம் வரையிலான வரலாற்று நிகழ்வுகள் 5 நிமிட Stereoscopic 3D படமாக ரயில் பெட்டியின் உள்ளே அமைந்திருக்கும் திரையில், பார்வையாளர்கள் 3D கண்ணாடி அணிந்து காணலாம். மேலும் சிறப்பம்சமாக காட்சிகளுக்கு ஏற்ப ரயில் வண்டியின் அசைவுகள், அதிர்வுகள், சன்னல் காற்று, போன்ற எஃபெக்ட்கள் இணைக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு ஒரு புது விதமான அனுபவத்தை தரும்படி அமைக்கப்படும்.

2. சாதனைச் சவாரி

இந்த அரங்கில் அமைக்கப்பட்டிருக்கும் ஆட்டோவில் பார்வையாளர்கள் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து, ஆட்டோவை இயக்கத் தொடங்கி ஸ்டியரிங்கை திருப்பி இயக்க, எதிரே இருக்கும் திரையில், அனிமேசன் வடிவில் காட்சிகளாக அமைக்கப்பட்ட, தலைவர் கலைஞர் அவர்களின் சாதனை ஆட்சிக் காலத்தில், இந்தியாவே கொண்டாடிய, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், சமத்துவபுரம், உழவர் சந்தை, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், சமத்துவக்கல்வி போன்ற புகழ் வாய்ந்த ஐந்து திட்டங்களுக்குள் பயணித்து, கண்டு அறிந்து கொள்ளலாம்.

3. உரிமை வீரர் கலைஞர்

சுதந்திரநாளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதல்வர்கள் கொடியேற்ற வேண்டும் என்ற மாநில உரிமையை போராடி பெற்றுத்தந்த தலைவர் கலைஞர் அவர்கள், 1974 ஆகஸ்டு 15 முதன் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி ஆற்றிய உரை, ஜார்ஜ் கோட்டை பின்னனி கொண்டு அமைக்கப்பட்ட அரங்கில் ஹாலோக்ராஃபி தொழில் நுட்பத்தில் தத்ரூபமாக அமைக்கப்படும்.

4. விழித்திரைக்குள் தமிழ்மறை

பார்வையாளர்கள் இந்த அரங்கின் மேடையில் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் பத்து அதி நவீன விரிட்சுவல் ரியாலிட்டி சாதனங்களின் மூலம் தலைவர் கலைஞர் அவர்கள் தமிழுக்கு ஆற்றியத் தொண்டுகளுக்கு சாட்சியாக விளங்கும் இடங்களையும், தமிழகத்தின் பெருமைமிகு அடையாளமாக குமரி முனையில் தலைவர் கலைஞர் அவர்களால் அமைக்கப்பட்ட வள்ளுவர் சிலைக்கு இந்தியப்பெருங்கடலில் பயணித்து நேரில் காண்பது போன்ற அனுபவத்தை பெறலாம்.

5. புதிரை வெல் - தலைவர் வழி செல்

இந்த அரங்கில், உள்ள தொடு திரையில் கலைஞர் அவர்களின் பொது வாழ்க்கை, கலை இலக்கிய, சினிமா, அரசியல் சம்மந்தப்பட்ட 10 கேள்விகள் புதிர் வடிவில் இடம் பெற்றிருக்கும். பார்வையாளர்கள் புதிருக்கான பதிலை தேர்ந்தெடுத்ததும், விடை சரி/தவறு என எதுவாக இருந்தாலும் திரையில் தோன்றும் தலைவர் கலைஞரின் உருவம் விடை பற்றிய விவரங்களை 20 வினாடிகளுக்கு சொல்வது போல அமைக்கப்படும்..

6. பகிர்ந்து கொள்ள ஒரு புகைப்படம்

இந்த அரங்கில் தலைவர் கலைஞர் அவர்களின் படிப்பறை, தத்ரூபமாக கலைஞர் அவர்களின் நாற்காலியுடன் அமைக்கப்பட்டிருக்கும். பார்வையாளர்கள் வந்து நாற்காலி அருகில் நிற்க, எதிரே இருக்கும் திரையில் அந்த நாற்காலியில், 3டி அனிமேசனில் தோன்றும் தலைவர் கலைஞர் அவர்களின் தத்ரூப உருவத்தோடு, பார்வையாளர்கள் இந்த வரலாற்று சிறப்பு மிக்க நினைவிடத்திற்கு வந்து சென்றதை நினைவில் கொள்ளும் வகையில் புகைப்படம் எடுத்துக் எடுத்துக் கொண்டதும், இந்த புகைப்படம் அவர்களின் கைப்பேசி எண்ணிற்கு பகிரப்படும்.

7. முடிவல்ல... தொடக்கம்

இந்த அரங்கில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு பிரமாண்டமான வளைவுத் திரையில் மாண்புமிகு முதல்வர்.மு.க.ஸ்டாலின் அவர்களின் நினைவுகளின் வழியாக கடந்த அறுபது ஆண்டு கால திராவிட இயக்க வரலாறு, தமிழகத்திற்கு கழகம் ஆற்றிய தொண்டுகள், சாதனை திட்டங்களுக்கு சாட்சியாய் தமிழகம் முழுவதும் அமைந்திருக்கும் இடங்கள் காட்சி வடிவிலும், இறுதியாக திராவிட மாடல் ஆட்சியின் எதிர்கால திட்டங்கள், லட்சியங்கள், தமிழ்நாடு பெறப்போகும் வளர்ச்சி பயணங்கள் குறித்து சொல்லும் விதமாக இந்த காட்சி 10 நிமிடங்கள் அமைக்கப்படும்

About Us

We must explain to you how all seds this mistakens idea off denouncing pleasures and praising pain was born and I will give you a completed accounts off the system and

Get Consultation

Contact Us

(c) 2020 Kalaignar Memorial - All rights reserved.